Welcome to Sri Lanka Inventors Commission (SLIC)! We are the National Body Established by the Sri Lanka Inventors Incentive Act NO 53 of 1979 with the prime objective of providing Technical, Legal, Financial and Market Access support to Sri Lankan inventors and to promote innovativeness among the citizens of Sri Lanka

News Headlines

User Profile

NavarajJackshan Nadarasa

Rating :5/3.5
You already rated
Thanks For Rating

25/06/1985ம் ஆண்டு கிளிநொச்சி மாநகரின் இதயப்பகுதியாய் விளங்கும் இல.98 விவேகானந்தா நகரில் (156ம் கட்டை வயர்லெஸ் பின்புரம்). பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே ஆராய்ச்சி மனப்பான்மையுடன் இருந்தார் கிளி/கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலையில் 3ம் தரம் வரை கல்வி கற்றார் பின்பு கிளி/ பாரதி வித்தியாலயத்தில் தனது கல்வியை தொடர்ந்தார். இவருடைய இலட்சியக்கனவே விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதே. சிறுவயதிலேயே யாருடைய வழிகாட்டலும் இன்றி தனக்கு தேவையான பொருட்களை செய்து கொள்ள ஆரம்பித்தார் இவரது இந்த செயற்பாடுகளுக்கு வீட்டில் இருந்தே முதல் எதிர்ப்பு கிளம்பியது. தனது கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டு கிடைக்காமல் அம்மாவிடம் இருந்து அடிதான் கிடைக்கும். அப்படி இருந்தும் மனம் தளராது முயற்சி செய்து தனது 11வது வயதில் சிறிய ஆய்வுகூடம் ஒன்றினை தனது வீட்டிலேயே ஆரம்பித்து பணிகளை தொடங்கினார். 1996ம் ஆண்டு இடப்பெயர்வின் போது தனது விலைமதிப்பற்ற கண்டுபிடிப்புக்களை இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அக்கராயன் குளம் 8ம் கட்டையில். மீளும் குடியேறியபோது அங்கேயே பாரதிவித்தியாலயமும் அதிகனத்திற்குறிய. மேன்மையாளர் கனகரத்தினம் அதிபர் அவர்களது தலைமையில் மீண்டும் ஆரம்பமாகியது. அப்போது கனத்திற்குறிய நகுலேஸ்வரன் (வட்டக்கச்சி) ஆசிரியர் அவர்கள் விஞ்ஞான ஆசிரியராக கடமையேற்றார். அப்போது அவர் ஜக் ஷன் அவர்களுடைய திறமைகளை இனங்கண்டு மிகவும் அதிகமான விடயங்களை சொல்லிக்கொடுத்து ஜக் ஷன் அவர்களுடைய தேடல் பசிக்கு விருந்தளித்து மட்டுமல்ல பல உதவிகளையும் செய்தார். ஒரு நாள் வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு எல்லா மாணவர்களையும் பார்த்து உங்களுடைய எதிர்கால இலட்சியம் என்ன எனக்கேட்டார் அப்போது இரண்டு மாணவர்களிடம் இருந்து வித்தியாசமான பதில்கள் வந்தன. உஷாகரன் (கிருஸ்னபுரம்) அவர்கள் தான் ஒரு வைத்தியர் ஆகவேண்டும் என சொன்னார். ஜக் ஷன் அவர்கள் மட்டும் தான் ஒரு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று சொன்னார். வகுப்பில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். ஆனால் பிரேம்குமார் ஆசிரியரும் நகுலேஸ்வரன் ஆசிரியர் அவர்களும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இருவரும் அதிகமாண சிரத்தை எடுத்து புது பல விடயங்களை சொல்லித்தந்தனர். விஞ்ஞானி ஆக என்ன செய்ய வேண்டும், What is the creative mind. விஞ்ஞானிகள் எப்படி சிந்திக்க வேண்டும். துறைசார் விஞ்ஞானி ஆவது எப்படி. பல் துறைசார் விஞ்ஞானி ஆவது எப்படி என்பது போன்ற பல பல விடயங்களை தெளிவுபடுத்தி உற்சாகம் தந்தார்கள். ஜக் ஷன் அவர்களுடைய அம்மாவின் தொழில் நிலைகாரணமாக 1998ம் ஆண்டு வவுனியா வீரபுரம் பகுதியில் குடியேறினார். வருமை ஒருபக்கம் வாட்ட குடும்ப சூழ்நிலை காரணமாக. விஞ்ஞான ஆய்வுபணிகளும் முடங்கியது. 2002ம் ஆண்டு ஜக் ஷன் அவர்களின் தாயார் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் படிப்பை முடித்து வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பின் குடும்ப வருவாய் உயர ஜக் ஷன் அவர்களின் ஆராய்ச்சி மனப்பாங்கும் பழையகுருடி கதவ திறடி என்ற வகையில் அதிகரித்தது தனது 14வயதில் வளிமண்டல அமுக்கத்தை மட்டுமே விசையாய் பயன்படுத்தி இயங்கக்கூடிய அடுத்ததலைமுறை தொழிநுட்ப முறையை உருவாக்கி அதனை பயன்படுத்தி Automatic Watter Supplying System ஒன்றை உருவாக்கி பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற்றார். அத்துடன் வளிமண்டல அமுக்கத்தை இயக்கசக்தியாக மாற்றும் முறையை கண்டுபிடித்தார். அத்துடன் பல ஆய்வுகளை செய்து 17ற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார். வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலய பாடசாலையில் அதிபருடன் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக பாடசாலையை விட்டு விலக்கப்பட்டார். அதன் பின் வவு/அல்காமியா மகாவித்தியாலயம் (நேரியகுளம்) பாடசாலையில் சேர்ந்து அதிபர். ஜனாப். சலீம். அவர்களுடைய ஒத்துழைப்புடனும். ஆசிரியர். ஜனாப். நஜாத் அவர்களுடைய வழிகாட்டலால் தனது பல் துறை சார் கலைஞன் என்பதை உறுதிப்படுத்தினார். 2003ம் ஆண்டு 7ம் மாதம். சிறுவர்களுக்கான பாடல் ஒலி நாடாவை ஜக் ஷன் அவர்களே பாடல் எழுதி, ஜக் ஷன் அவர்களே மெட்டிட்டு, ஜக் ஷன் அவர்களே இசையமைத்து வெளியிட்டார். இசை அரும்பு என்ற ஒலி நாடா மூலம் ஜக் ஷன் அவர்கள் ஒரு சிறந்த கலைஞர் என்பதை உறுதிப்படுத்தினார். பல் வாத்தியக்கலைஞர் ஆன இவர் வெண்புறா என்ற இசைக்குழுவின் ஸ்தாபகர் ஆவார். இவரது தாயார் இவரை ஒரு வைத்தியர் ஆக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் ஜக் ஷன் அவர்களோ தன்னுடைய பல் துறைசார் விஞ்ஞானி ஆகவேண்டும் இலக்கையே கையில் பிடித்து இருந்தார். இவர் மீண்டும் தனது ஆராய்ச்சியை ஆரம்பித்து (Automatic Power Generating System 1GV Output) ஒன்றை உருவாக்கி வருகிறார். Call: 0094 71 71 71 810 0094 77 0 88 9494 E-mail: nnjackshan@email.com nnjackshan@gmail.com Webside: www.y8k.8k.com

Mobile

0717171810

Website

www.y8k.8k.com

My Skills

  • Mechanics
  • Engines
  • Machinery
  • Industrial processes
  • Metallurgy
  • Tools
  • Computer Science
  • Software
  • Electronics
  • Electricity
  • Methods of communication
  • Building
  • Construction
  • Materials
  • Woodwork
  • Security
  • Rescue
  • Alarm
  • Commercial
  • Industrial and office equipment
  • Agriculture
  • Horticulture
  • Gardening
  • Machines and accessories
  • Medicine
  • Surgery
  • Orthopedics
  • Optics
  • Photography
  • Teaching methods and materials
  • Musical instruments
  • Art materials
  • Transport
  • Motor vehicles
  • Ships
  • Aviation
  • Accessories
  • Foodstuffs
  • Drinks
  • Health Hygiene
  • Sport
  • Protection of the environment

FaLang translation system by Faboba

sahasak banner

what we do

Latest News & Events

 SN Theme low

 

Invent2017EnglishAD

 IAFMPaperADLow

Prosperity through Inventions and Innovations

To encourage Sri Lankan patented inventors to make known their inventions by giving annually sizeable cash awards and medals known as the " Presidential Awards for Inventions "

/ Learn More

Like us on

Copyright © Sri Lanka Inventors Commission. All Rights Reserved.